உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான ஆட்டம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.அதன்படி ஆஸ்திரேலியாவின் ஆரோன் பிஞ்ச், டேவிட் வார்னர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஆரோன் பிஞ்ச் 115 பந்தில் சதம் அடித்தார். சதம் அடித்த அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார்.
2015 உலகக்கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக ஆரோன் பிஞ்ச் சதம் அடித்திருந்தார். தற்போது மீண்டும் இங்கிலாந்துக்கு எதிராக சதம் அடித்துள்ளார். உலகக்கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக இரண்டு போட்டிகளில் மட்டுமே ஆரோன் பிஞ்ச் விளையாடியுள்ளார். இரண்டிலும் சதம் அடித்து அசத்தியுள்ளார்.
0 comments:
Post a Comment