கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டாலும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பிரச்சாரப் பணிகளை தான் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஸ தெரிவித்தார்.
கோட்டாபய ராஜபக்ஸ, கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரக அறிவிக்கப்பட்டால் கட்சியின் நடவடிக்கையில் தொடர்ந்தும் ஈடுபடுவீர்களா? என பசில் ராஜபக்ஸவிடம் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
கோட்டாபய ராஜபக்ஸவின் பெயர் அறிவிக்கப்பட்டால், மஹிந்த ராஜபக்ஸவுக்காக செயற்பட்டதை விடவும் அதிகமாக செயற்பட வேண்டியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment