லசந்த விக்ரமதுங்க, வசீம் தாஜூடீனின் வழக்குகளை துரிதப்படுத்த உத்தரவு

முக்கிய 04 வழக்குகள் தொடர்பான விசாரணையை விரைவில் நிறைவு செய்து அறிக்கை சமர்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பதில் பொலிஸ் மா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சட்டமா அதிபரினால் இந்த உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை, றகர் வீரர் வசீம் தாஜூதீன் படுகொலை மற்றும் 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவம் உள்ளிட்ட நான்கு சம்பவங்கள் தொடர்பிலான வழக்குகளின் விசாரணைகளையே இவ்வாறு துரிதப்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்குகளின் விசாரணைகளை அவசரமாக நிறைவு செய்து அறிக்கையை ஒப்படைக்குமாறு சட்ட மா அதிபர் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment