அதுரலிய தேரருக்கு எம்.பி. வியாழேந்திரனும் ஆதரவு

அதுரலிய ரத்தன தேரர் ஆரம்பித்துள்ள போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

இப் போராட்டம் மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு முன்பாக இன்று காலை 7 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


அமைச்சர் ரிஷாட் பதியுதீன், மாகாண ஆளுநர்களான ஹிஸ்புல்லா மற்றும் அசாத் சாலி ஆகியோர் உடன் பதவி விலக வேண்டும் என்பதே எங்களதும் விருப்பமாகுமென வியாழேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.


இந்த விடயங்களை உள்ளடக்கி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அதுரலிய ரத்தன தேரரின் போராட்டத்துக்கு வலிமை சேர்க்கும் வகையில்  இந்த  உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


வியாழேந்திரன் ஆரம்பித்துள்ள போராட்டத்தில் அவரது ஆதரவாளர்களும் கலந்துகொண்டு எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment