இன்று இலங்கை வருகிறார் மோடி!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஞாயிற்றுக்கிழமை(09)இலங்கை வருகை தரவுள்ளார்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று முற்பகல்-11 மணியளவில் வந்தடையவுள்ள பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்பதற்கான நிகழ்வினை ஜனாதிபதி செயலகம் ஏற்பாடு செய்துள்ளது.
இந்த விஜயத்தின்போது இந்தியப் பிரதமர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ஸ, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடுகிறார்.
பின்னர் இன்று பிற்பகல் இந்தியப் பிரதமர் மீண்டும் நாட்டிலிருந்து புறப்பட்டு செல்லவுள்ளார். இந்தியப் பிரதமரின் வருகையை முன்னிட்டு கொழும்பு நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், விசேட போக்குவரத்து திட்டமும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, இரண்டாவது தடவையாகப் பிரதமராகப் பதவியேற்றதன் பின்னர் நரேந்திர மோடி உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளும் இரண்டாவது நாடு இலங்கையாகும். நேற்றைய தினம்(08) தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயமாக அவர் மாலைதீவிற்குப் பயணித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment