இன்று திங்கட்கிழமை (3) ஆம் திகதி அலரி மாளிகையில் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் முக்கிய சந்திப்பு நடைபெற்றது.
தமது அமைச்சு மற்றும் பிரதியமைச்சு பதவிகளில் இருந்து விலகுவது குறித்த தீர்மானத்தை இதன்போது முஸ்லிம் அரசியல்வாதிகள் அறிவித்தனர். இதைக்கேட்டு அப்சட் ஆன பிரதமர், ரணில் விக்கிரமசிங்க இதனால் அரசாங்கம் ஆட்டம் காணலாம் என தமது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
இதன்போது குறிக்கிட்டுள்ள அமைச்சர் மங்கள சமரவீர எக்காரணம் கொண்டும், முஸ்லிம் அரசியல்வாதிகள் பதவி விலகக்கூடாதென வலியுறுத்தியுள்ளார்.
0 comments:
Post a Comment