பாடசாலையில் கல்வி கற்ற நிலையில் மயங்கி விழுந்த ஆறு மாணவர்கள் காரைதீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காரைதீவு சண்முகா மகாவித்தியாலய பாடசாலை மற்றும் காரைதீவு ராமகிருஸ்ணா பெண்கள் பாடசாலையை சேர்ந்த ஆறு மாணவர்களே இவ்வாறு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
தரம் 11ஐ சேர்ந்த அ. டனுஸ்காந்(வயது-16), யசோதா(வயது-16), மலர்விழி(வயது-16 அட்டப்பளம்), தரம் 8 மாணவர்களான கே.எஸ் டனுஜா(காரைதீவு 8), ரஞ்சித் யதுசனா (வயது-13), உதயகுமார் டிலக்சன்(வயது-13) ஆகிய மாணவர்களே தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடும் வெயில் காரணமாகவும், காலை ஆகாரம் உண்ணாமை மற்றும் இதர காரணங்களால் திடீரென மயக்கமுற்ற நிலையிலேயே சிகிச்சைக்கென மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment