தென்மேற்கு டெல்லியில் உள்ள வசந்த் விஹார் பகுதியில் வசித்து வந்தவர் விஷ்ணு மாத்துர்(80). இவரது மனைவி சசி மாத்தூர்(75). ஓய்வுபெற்ற மத்திய அரசு பணியாளர்களான இவர்கள் இருவரும் கத்திக் குத்து மற்றும் கழுத்தில் அறுபட்ட காயங்களுடன் வீட்டினுள் இன்று காலை பிணமாக கிடந்தனர்.
அங்கு வீட்டு வேலை செய்துவந்த பெண் பணியாளர் குஷ்பூ(24) என்பவரும் கழுத்தில் வெட்டுப்பட்ட காயங்களுடன் உயிரிழந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்ட அக்கம்பக்கத்து வீட்டினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
விரைந்து வந்த போலீசார் பிரேதங்களை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கொள்ளை முயற்சியில் இந்த கொலைகள் நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment