இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் மலையக மக்களின் ஆதரவு முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் வாரிசாக யாராவது வருமாயின் அவருக்கே ஆகும் என அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தலவாக்கலை, லிந்துல பிரதேசத்தில் நேற்று (23) ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
நாம் இப்போது அடுத்த ஜனாதிபதித் தேர்தல் குறித்து தீர்மானம் எடுக்கும் காலம் உருவாகியுள்ளது. தற்போதைய ஜனாதிபதி மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லையென எமக்கு அறிந்து கொள்ள முடிந்தது. மலையக மக்களாகிய நாம், மலையகத்துக்கு எதையும் சாதித்துத் தர முடியுமான ஒரு ஜனாதிபதியையே நியமித்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment