மஹிந்த ராஜபக்ஷவிற்கு குண்டு துளைக்காத வாகனம் ஒன்றினை வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு குண்டு துளைக்காத வாகனமொன்றை வழங்கும் யோசனையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்த வாரம் அமைச்சரவையில் முன்வைத்திருந்தார்.
இதற்கு ஆளும் தரப்பில் உள்ள சில முக்கிய அமைச்சர்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டு வந்தனர்.
இந்தநிலையிலேயே மஹிந்தவிற்கு குண்டு துளைக்காத வாகனம் ஒன்றினை வழங்குவதற்கு ஜனாதிபதி எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எதிர்க்கட்சித் தலைவருக்கு ஏற்கனவே மூன்று குண்டு துளைக்காத வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷவிற்கு இடையில் அண்மைக்காலமாக முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்தவுடன் இணைந்து செயற்படப் போவதில்லை எனவும் ஜனாதிபதி கடந்த சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.
இந்தப் பின்னணியிலேயே மஹிந்தவிற்கு குண்டு துளைக்காத வாகனம் ஒன்றினை வழங்குவதற்கு ஜனாதிபதி எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
0 comments:
Post a Comment