வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மரண தண்டனை கைதியான துமிந்த சில்வாவின் அறையில் இருந்து நான்கு கையடக்க தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சாதாரண கையடக்க தொலைபேசிகள் இரண்டும் ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகள் இரண்டும் இவ்வாறு சிறைச்சாலை புலனாய்வு அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், இவ்வாறு கைப்பற்றப்பட்ட கையடக்க தொலைபேசிகளை சிறைச்சாலை புலனாய்வு அதிகாரிகள் இன்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை, 1500 ரூபாய் பெறுமதியான கையடக்க தொலைபேசிகள் சுமார் 25,000 ஆயிரம் ரூபாய்க்கு சிறைச்சாலை வைத்திய சாலையில் விற்பனை செய்யப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
எனினும் குறித்த தகவல் இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment