தவறேதும் புரியாத ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவை பதவியிலிருந்து நீக்குவது அவசியமற்றதென மொரவெவ பிரதேச சபையின் தலைவர் பொல்ஹேன்கொட உபரதன தேரர் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது பொல்ஹேன்கொட உபரதன தேரர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஹிஸ்புல்லா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து ஆராய்ந்து பார்த்தபோது, அவர் மீது எந்ததொரு தவறுமில்லை என்பது உறுதியாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆகவே அவரை பதவியிலிருந்து நீக்குவது முறையற்ற செயற்பாடாகுமெனவும் பொல்ஹேன்கொட உபரதன தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை அமைச்சர் ரிசாட் பதியுதீன், ஆளுநர்களான அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை உடனடியாக நீக்க வேண்டுமென கோரி, தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் அதுரலிய ரத்தன தேரர் ஈடுபட்டுள்ளார்.
அவருக்கு ஆதரவாக நாட்டின் ஏனைய பகுதிகளிலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment