கொல்களக் குழியில் உயிரிழந்தவர்களின் நினைவு தினம் அனுஸ்டிப்பு

நகரசபையின் கொல்கள குழியொன்றினுள் கடமையின்போது வீழ்ந்து உயிரிழந்த நகரசபை ஊழியர்களின் 45 ஆம் நாள் நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.

புதிய அரச பொது ஊழியர் சங்கத்தினால் இவ் ஊழியர்களுக்கான நினைவு தினம் வவுனியா நகரசபை மண்டபத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.

சங்கத்தின் தலைவர் செ.செல்வேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மத தலைவர்கள், வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகதாரலிங்கம், நகரசபை தலைவர் இ.கௌதமன், நகரசபை உறுப்பினர்கள், தொழிற்சங்கத்தின் உறுப்பினர்கள், தமிழ் விருட்சத்தின் தலைவர் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட பொது மக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி கடமையின் நிமிர்த்தம் மாடு வெட்டும் கொல்களத்தில் குழியொன்றைத் துப்பரவு செய்யும்போது நான்கு ஊழியர்கள் விசவாயு தாக்கத்திற்குள்ளாகி உயிரிழந்திருந்தனர்.
















Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment