அமைச்சுப் பதவியை மீண்டும் ஏற்றுக்கொள்ளத் தயார் என பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹஷீம் தெரிவித்துள்ளார்.
கேகாலை – அம்பன்பொல பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர்:
நாம் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து அவர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டோம். அதேபோன்று எனது மாவட்ட மக்களும் பதவியைப் பெற்றுக்கொள்ளுமாறு என்னிடம் வேண்டுகோள் விடுத்தனர். ஆகவே கட்சியும், அரசும் குறித்த வேண்டுகோளை ஏற்றுக்கொள்வதாயின் மீண்டும் பதவியைப் பொறுப்பேற்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பேன்.எனது மாவட்ட மக்களின் வேண்டுகோளுக்குத் தலைசாய்த்து மீண்டும் பதவியை ஏற்றுக்கொள்ளத் தயாராகவுள்ளேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment