பிக் பாஸ் 13 நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ஹீரோயின் கலந்து கொள்ளப் போவதாக வெளியான தகவல் குறித்து உண்மை தெரிய வந்துள்ளது.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 13வது சீசன் வரும் செப்டம்பர் மாதம் 29ம் தேதி துவங்க உள்ளது. 13வது சீசன் என்பதால் ஹாரர் தீமில் நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளார்களாம்.
இந்நிலையில் போட்டியாளர்கள் குறித்த பேச்சு சமூக வலைதளங்களில் கிளம்பியுள்ளது. இந்த சீசனில் சல்மான் கானின் வீர் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான ஜரீன் கான் கலந்து கொள்ளப்போவதாக செய்திகள் வெளியாகின.
தன்னை பற்றி ஒரு தகவல் தீயாக பரவிக் கொண்டிருப்பதை அறிந்த ஜரீன் கான் அது குறித்து விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து ஜரீன் கான் கூறியிருப்பதாவது, நான் பிக் பாஸ் 13 நிகழ்ச்சியில் பங்கேற்பதாக செய்திகள் வெளியாகியுள்ளதை பார்க்க சிரிப்பாக உள்ளது. நான் பிக் பாஸ் வீட்டிற்கு செல்வது எனக்கே தெரியாதே. நான் பிக் பாஸ் 13 நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய ஆட்களாக தேர்வு செய்வார்கள். அப்பொழுது தான் அவர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து பிரச்சனை செய்து டி.ஆர்.பி.யை கண்டமேனிக்கு ஏற்றுவார்கள். ஒரு பிரபல காதல் ஜோடியை அணுகி பிக் பாஸ் வீட்டிற்கு வருமாறு அழைக்க, அந்த காதலரோ அய்யோ சாமி, ஆளை விடுங்க என்று தெறித்து ஓடிவிட்டாராம்.
பிக் பாஸ் 13 நிகழ்ச்சியின் ஷூட்டிங் லோனாவாலாவில் இல்லாமல் மும்பையில் நடைபெறுமாம். முன்னதாக 11 சீசன்கள் மும்பையில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மலைப்பகுதியான லோனாவாலாவில் தான் நடந்தது. 5வது சீசன் மட்டும் குஜராத் மாநிலத்தில் உள்ள கர்ஜாத்தில் நடந்தது. சல்மான் தனது படங்களில் பிசியாக இருப்பதால் மும்பை தான் அவருக்கு வசதியாக இருக்குமாம்.
தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கப் போகிறது என்று கூறினால் யார், யாரெல்லாம் கலந்து கொள்ளப் போகிறார்களோ என்று ரசிகர்கள் பேசுவார்கள். ஆனால் இந்தியிலோ இந்த சீசனில் சல்மான் கான் நாள் ஒன்றுக்கு எத்தனை கோடி சம்பளம் வாங்கப் போகிறாரோ என்று பேசுகிறார்கள். கடந்த சீசனில் எபிசோடு ஒன்றுக்கு சல்மான் கான் ரூ. 12 கோடி முதல் ரூ.14 கோடி வரை வாங்கினார். இந்த சீசனில் எத்தனை கோடியோ?
0 comments:
Post a Comment