முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட கல்லாறு ஹீனைஸ் நகர் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் வீட்டுத்திட்டம் இராணுவம் மற்றும் வனவளத்திணைக்களம் ஆகியவற்றினால் இடை நிறுத்தப்பட்டுள்ளது.
குறித்த வீடுகள் அமைக்கப்பட்டு வரும் காணிகள் அனைத்தும், அரச காணிகளே என்று மன்னார் மாவட்டச் செயலர் சி.ஏ.மோகன்றாஸ் தெரிவித்தார்.
முசலி பிரதேசச் செயலர் பிரிவில் ஹீனை நகர் பகுதியில் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் வழங்கப்பட்டுள்ள வீட்டுத்திட்டத்தில் 87 வீடுகள் அமைப்பது தொடர்பாக நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது.
இந்த வீட்டுத்திட்டம் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது. 87 வீடுகள் அமைப்பதற்கான காணிகளில் 65 வீடுகளுக்கான மற்றும் காணிகளுக்கான அனுமதிப்பத்திரமும் (போமீட்) வழங்கப்பட்டுள்ளது. ஏனைய 22 வீடுகளுக்கான அனுமதிப்பத்திரமும் இருக்கின்றது. குறித்த காணிகள் அனைத்தும் அரசுக்குச் சொந்தமானது.
வன வளத்திணைக்களத்திற்கு சொந்தமான எக்காணியும் அப்பகுதியில் இல்லை. குறித்த அரச காணியிலே குறித்த வீடுகள் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் அமைக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையிலே குறித்த வீட்டுத்திட்டம் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிகின்றேன்-என்றார்.
0 comments:
Post a Comment