மாகாண சபைகளுக்கான தேர்தலை நடாத்துவதற்கு உண்மையில் அரசு விரும்பவில்லை. அதே நேரம் இத் தேர்தலை நடத்தினால் தோற்றுவிடுவோம் என்ற அச்சம் பெரும்பான்மைக் கட்சிகளிடத்தே இருப்பதன் காரணமாகவே தேர்தல் விடயத்தில் அவர்கள் அக்கறையற்று இருக்கின்றனர். இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன்.
மாகாண சபைகள் முடிவடைந்து பல மாதங்களாகியும் மாகாணங்களுக்கான தேர்தல் நடாத்தப்படாமை தொடர்பில் ஊடக
சந்திப்பில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலையே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது,
மாகாண சபைகளை நடாத்துவதா இல்லையா என்பது நிச்சயமாக அரசைப் பொறுத்த விடயம். ஏனென்றால் மாகாண சபை முறைமையில் சிறிய மாற்றத்தைக் கொண்டு வந்த அல்லது பழைய முறைக்குப் போவதா என்பதில் சிறிய வாதம் நடந்து கொண்டிருக்கிறது.
ஆகவே ஒரு சட்டமூலம் ஒன்று கட்டாயமாக நாடாளுமன்றத்திற்கு கொண்ட வரப்பட வேண்டியிருக்கின்றது. இதனை அரசுதான் செய்யலாம். வேறு எவரும் செய்ய முடியாது. அரசைப் பொறுத்தமட்டில் அல்லது தென்னிலங்கை
பெரும்பான்மைக் கட்சிகளைப் பொறுத்தமட்டிலும் அவர்கள் இப்போது மாகாண சபைத் தேர்தலைக் காட்டிலும் ஐனாதிபதித் தேர்தலில் தான் கூடுதலாக அக்கறை கொண்டிருக்கின்றனர்.
ஏனெனில் இத் தேர்தலின் வெற்றி தோல்வியில் இருவருமே பயப்படலாம். அதாவது தங்களைச் சோதிக்கின்ற தேர்தலாக இது இருக்கக் கூடாது என்பற்காக அவ்வாறு நினைக்கலாம். ஏனெனில் மாகாண சபைத் தேர்தலை வைத்தால் அதில் வென்றவர்களுக்கு சாதகம் அதிகம் தோற்றவர்க்கு சாதகம் குறைவு என்று கருதலாம்.
ஆகையினால் அதனைப் பிற்போடுவதற்குத் தான் விரும்புகின்றார்கள் என்பது தான் இன்றைய காலகட்டத்தில் அவர்களது நோக்கமாக இருக்கலாம். ஆனால் கூட்டமைப்பான நாங்கள் இதில் எதனையுமே செய்ய முடியாது. நாங்கள் சிறுபான்மையான கட்சி.
ஆக நாங்களாகவே ஒரு சட்டமூலத்தைக் கொண்ட வர முடியாது. அவ்வாறு கொண்டு வருகின்ற போது அதில் சரி பிழை பார்த்து ஆதரிப்பதும் ஆதரிக்காததும் வேறு விடயம்.
அதுவரை நாங்கள் நாடாளுமன்றத்திலும் தனிப்பட்ட முறையிலும் பேசலாம். ஆனால் அதைக் கொண்டு வருவதும் கொண்டு வராததும் அரசின் கையில் தான் இன்று உள்ளது. ஆக இன்று அதனைக் கொண்டு வந்து தேர்தலை நடத்த அரசு விரும்பவில்லை என்பது தான் அவர்களது நிலைப்பாடாக உள்ளது.-என்றார்.
0 comments:
Post a Comment