சட்டவிரோதமாக மின்சாரத்தினை தனது வீட்டிற்கு பெற்றிருந்த முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மின்சார சபையின் திடீர் பரிசோதனைக்குழு இன்று வவுனியாவில் உள்ள பல இடங்களிலும் சட்டவிரோதமான முறையில் மின்சாரத்தினை பெறுபவர்கள் தொடர்பாக சோதனையில் ஈடுபட்டிருந்தது.
இதன்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரொருவர் தனது வீட்டிற்கு சட்டவிரோதமான முறையில் மின்சாரத்தினை அண்மைக்காலமாக பெற்றுவந்துள்ளமை மின்சார சபையினர் கண்டறிந்துள்ளனர்.
இதனையடுத்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரை கைது செய்த மின்சார சபையினர் பொலிஸாரிடம் கையளித்து வழக்கு பதிவு செய்திருந்தனர்.
இதனையடுத்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரை இன்று நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment