தற்கொலை தாக்குதல்! மேலும் ஒருவர் உயிரிழப்பு

உயிர்த்த ஞாயிறு தினத்தில் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுவெடிப்பில் படுகாயமடைந்தவர்களில் மேலும் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் இன்று மாலை 6.30 மணியளவில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு இருதயபுரத்தினை சேர்ந்த செ.அருண்பிரசாத் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர், சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலில் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவசர சிசிச்சை பிரிவில் சிசிச்சை பெற்றுவந்தார்.
எனினும், மேலதிக சிகிச்சைகளுக்காக உலங்கு விமானத்தின் மூலம் கண்டி போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு 47 நாட்களாக தொடர்ச்சியாக சிசிச்சை அளிக்கப்பட்ட நிலையிலே இன்று உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் மட்டக்களப்பில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏற்கனவே 29 ஆக காணப்பட்ட போதிலும் தற்போது உயிரிழந்துள்ளவரின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.


இதனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 30ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment