சாதனைப் பட்டியலில் இணைந்த இங்கிலாந்து வீரர்

வங்கதேச அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில், இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜேசன் ராய் அதிரடி சதம் விளாசியதுடன், சாதனைப் பட்டியலிலும் இணைந்துள்ளார்.
இங்கிலாந்து-வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை லீக் போட்டி, கார்டிஃபில் தற்போது நடைபெற்று வருகிறது. நணையச் சுழற்சியில் வெற்றி பெற்ற வங்கதேச அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.
அதன்படி இங்கிலாந்து அணி முதலில் துடுப்பாட்டத்தை துவங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய் மற்றும் பேர்ஸ்டோவ் இருவரும் களமிறங்கினர். தொடக்கத்திலேயே இவர்கள் அதிரடி காட்டியதால், இங்கிலாந்து அணியின் ரன் வேகம் எகிறியது.
அணியின் ஸ்கோர் 128 ஆக இருந்தபோது பேர்ஸ்டோவ் 51 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். எனினும், மறுமுனையில் வங்கதேசத்தின் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஜேசன் ராய், 92 பந்தில் சதம் அடித்தார்.
இது அவருக்கு 9வது சர்வதேச சதம் ஆகும். இதன்மூலம் விரைவாக 9 சதங்கள் அடித்த வீரர்களின் சாதனைப் பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார். ஜேசன் ராய் 77 இன்னிங்சில் இந்த சாதனையைப் படைத்துள்ளார்.
அவருக்கு முன்பாக தென் ஆப்பிரிக்க வீரர் ஆம்லா(52), டி காக்(53), பாகிஸ்தானின் பாபர் ஆசம்(61), இந்தியாவின் தவான்(72) ஆகியோர் உள்ளனர்.
சதத்திற்கு பிறகும் அதிரடி காட்டிய ஜேசன் ராய் 153 (121) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இதில் 5 சிக்சர்கள் மற்றும் 14 பவுண்டரிகள் அடங்கும்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment