முல்லைத்தீவு மல்லாவி ஆதார மருத்துவமனை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சிறுநீரக நோய் சிகிச்சை நிலையக் கட்டடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இன்று திறந்து வைக்கப்பட்டது.
முல்லைத்தீவு பொது விளையாட்டரங்கில் இருந்து இலத்திரனியல் முறை மூலமாக குறித்த கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.
சிறுநீரகத்தை காப்போம் உயிராக நல்வாழ்வுக்கு வழி தோன்றும் எளிதாக "மைத்திரி ஆட்சி நிலையான நாடு" கொள்கை பிரகடனத்தில் கூறப்பட்டுள்ள அனைவருக்கும் நலம் பெற்று ஆரோக்கியம் மிக்க மக்கள் சமூகத்தை உருவாக்கும் நோக்கில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு சுகாதாரம் போசனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சின் தேசிய சிறுநீரக நோய் நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக இக் கட்டடம் திறந்து வைக்கப்ப்ட்டது.
0 comments:
Post a Comment