பொதுவான சட்டமும் கல்விக் கொள்கையும் நாட்டிற்கு அவசியம் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
குருநாகல் நகர மண்டபத்தில் இடம்பெற்ற தேசிய வழிகாட்டல் நிகழ்ச்சியில் லந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அனைத்து இலங்கையர்களும் நாட்டிற்குப் பொருத்தமான வகையில் வாழ வேண்டும். அதேபோல் எதிர்கால சந்ததியினருக்கு பொருத்தமான வாழ்க்கைச் சூழலை இப்போதிருந்தே உருவாக்க வேண்டும். இதற்கு அனைத்துக் கட்சிகளினதும் ஆதரவு அவசியமாகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
நாட்டின் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு கூடுதலான பங்களிப்பை வெளிநாட்டவர்களே வழங்கியிருப்பதாக குறிப்பிட்ட அவர், பெருந்தொகையான பணம் வெளிநாடுகளில் இருந்து கிடைக்கப் பெற்றிருப்பதாக சுட்டிக்காட்டினார்.
0 comments:
Post a Comment