செம்மணிக்குளம் வீதியாகக் காணப்பட்ட கல்வியங்காடு புதிய செம்மணி வீதி வடக்கு முன்னாள் மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தின் கோரிக்கைக்கு அமைய தற்பொழுது புதிய செம்மணி வீதியாக மாற்றப்பட்டுள்ளது.
கடந்த 75 ஆண்டுகளுக்கு மேலாக வீதி அபிவிருத்தி திணைக்கள பதிவேடுகளில் செம்மணிக்குளம் வீதி என்று காணப்பட்ட போதிலும் அப் பகுதி மக்கள் புதிய செம்மணி வீதி என்றே பயன்படுத்திவந்தனர்.
இந்த நிலையில் வீதி அபிவிருத்தி திணைக்கள பதிவேட்டில் புதிய செம்மணி வீதியாக மாற்றுமாறு முன்னாள் வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் வீதி அபிவிருத்தி திணைக்களகத்தை கோரியிருந்தார்.
அவைத் தலைவரின் கோரிக்கையை ஏற்று வீதி அபிவிருத்தி திணைக்களம் தமது பதிவேடுகளில் புதிய செம்மணி வீதி என்று மாற்றியமைத்துள்ளது.
இதனை சி.வி.கே.சிவஞானம் நல்லூர் பிரதேச சபைக்கும் தெரியப்படுத்தியதை அடுத்து தற்பொழுது நல்லூர் பிரதேச சபையினால் புதிய செம்மணி வீதி என்ற பெயர் பலகை நாட்டப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment