எதிர்க் கட்சியின் வேட்பாளர் யாராக இருக்கும் என்பது எமக்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லையென ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர் பி. ஹரிசன் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவா அல்லது வேறு எவராலுமா? என்பது அந்தக் கட்சியின் உள்வீட்டுப் பிரச்சினை. அது எமது கட்சியில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை.
போகின்ற போக்கில் அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பதவியை கோட்டாபய ராஜபக்ஸவுக்கும் வழங்கப்படாதிருக்கும் நிலைமையே அக்கட்சிக்குள் காணப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைக் கூறினார்.
0 comments:
Post a Comment