வைரவர் கோவில் நுளைவாயில் திறந்து வைப்பு

முல்லைத்தீவு - முள்ளியவளை  நரசிம்ம வைரவர் கோவிலின் நுழைவாயிலை முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா  ரவிகரன் திறந்து வைத்தார். 

2018ஆம் ஆண்டுக்கான பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதி ஒதுக்கீட்டிலிருந்து ரவிகரனால் குறித்த நரசிம்ம வைரவர் கோவிலின் நுழைவாயில் அமைப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கோவிலின் நுழைவாயில் நேற்று திறந்து வைக்கப்பட்டது.

இதேவேளை,  நரசிம்ம வைரவர் கோவிலினுடைய வருடாந்த பொங்கல் விழாவும், பூசைகளும் இடம்பெற்றன.

நிகழ்வில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சி.லோகேஸ்வரன் மற்றும் கோவில் நிர்வாகத்தினர், அடியவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.














Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment