பா.ஜ.க.வுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியை கிண்டல் செய்வது வாக்காளர்களை உதாசீனப்படுத்துவதாகும் என பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதனால் காங்கிரஸ் கட்சி தோற்றால் நாடு தோற்கடிக்கப்பட்டதாகக் கூறி அகங்காரத்துடன் வாக்காளர்களை உதாசீனப்படுத்த வேண்டாம் என காங்கிரஸிடம் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி இன்று (புதன்கிழமை) மாநிலங்களவையில் உரையாற்றினார். இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மோடி மேலும் தெரிவிக்கையில், “மக்களவைத் தேர்தலில் மக்கள் மகத்தான தீர்ப்பளித்து எங்களை வெற்றிபெற வைத்துள்ளார்கள். அதை காங்கிரஸ் கட்சி கிண்டல் செய்வது அவர்களை அவமானப்படுத்துவதாகும்.
‘பா.ஜ.க. தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டது ஆனால் நாடு தோற்றுவிட்டது’ என்றும், ‘காங்கிரஸ் கட்சி தோற்றதால், நாடு தோற்கடிக்கப்பட்டு விட்டது’ எனவும் பேசுகிறார்கள். எனவே அகங்காரத்துக்கும் அளவு இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் இதுபோன்ற பேச்சு, வாக்காளர்களை உதாசீனப்படுதுவதாகும்.
குறுகிய மனோபாவம், ஏற்கமுடியாத கொள்கைகளைக் கொண்டவர்கள் மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளாமல், பா.ஜ.க. வென்றதால், தேசம் தோல்வி அடைந்துவிட்டது என்கிறார்கள். எமது ஜனநாயகத்தை இதற்கு மேல் அவமானப்படுத்த வேறு ஒன்றும் இல்லை.
17 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தைக் கூட பெறமுடியவில்லை. காங்கிரஸ் கட்சி தோல்வியை ஏற்றுக்கொண்டு, தங்களை சுயபரிசோதனை செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.
0 comments:
Post a Comment