வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் அமைந்துள்ள முஹிய்யித்தீன் ஜீம்மா பள்ளிவாசலில் இப்தார் நிகழ்வு வெகு சிறப்பாக இன்று மாலை இடம்பெற்றது.
மதத்தலைவர்களின் ஆசியுடன் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மகிந்த வில்லுவாராட்சி தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது.
இதில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.பி.மல்வலகே , வவுனியா நகரசபை உப நகரபிதா சு. குமாரசாமி , நகரசபை உறுப்பினர்கள் மற்றும் வவுனியா வர்த்தக சங்கச் செயலர் ஆ. அம்பிகைபாலன் , வர்த்தகர்கள் , கடற்படையினர் , பொலிஸார் , பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது உரையாற்றிய மாமடு விகாராதிபதி முவட்டகம ஆனந்த தேரர் பாக்கிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அகதிகள் வவுனியா பூந்தோட்டத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பினை தெரிவித்திருந்தார்.
0 comments:
Post a Comment