குருநாகல் – திவுலபிட்டிய தெல்வகுர பகுதியில் உள்ள வீடொன்றில் கழுத்து நெரிக்கப்பட்டு வயோதிப பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
கை கால்கள் கட்டப்பட்டு நிலையில் குறித்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்டுள்ளவர், தெல்வகுர பகுதியைச் சேர்ந்த 77 வயதானவர் என்பதோடு, அவர் அந்த வீட்டில் தனிமையில் வாழ்ந்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்ய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment