இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் 13 ஆவது நாளான இன்று பிரிஸ்டலில் நடைபெறும் 16 ஆவது லீக் ஆட்டத்தில் பங்களாதேஷ்-இலங்கை அணிகள் மோதுகின்றன.
மோர்தசா தலைமையிலான பங்களாதேஷ் அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென்னாபிரிக்காவை வீழ்த்தியது. பின்னர் நடந்த ஆட்டங்களில் 2 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்திடமும், 106 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடமும் அடுத்தடுத்து தோல்வியடைந்தது.
அடுத்தடுத்து சந்தித்த தோல்விகளில் இருந்து மீண்டு வர வேண்டிய நெருக்கடி பங்களாதேஷ் அணிக்கு இருக்கிறது.
கருணாரத்னே தலைமையிலான இலங்கை அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் மோசமான தோல்வியை சந்தித்தது.
மழையால் பாதிக்கப்பட்ட 2 ஆவது ஆட்டத்தில் 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை தோற்கடித்தது. பாகிஸ்தானுக்கு எதிரான 3 ஆவது ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.
இலங்கை அணியினர் ஒருங்கிணைந்த ஆட்டத்தை அளிக்க முடியாமல் திணறி வருகிறார்கள்.
சமபலம் வாய்ந்த இந்த இரு அணிகளும் மோதும் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரிஸ்டலில் இன்று மழை பெய்ய அதிக வாய்ப்பு இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்தப் போட்டியும் மழையால் பாதிக்கப்படலாம். எனினும் பொறுத்திருந்து பார்க்கலாம்.
0 comments:
Post a Comment