தமிழர்களை காப்பாற்றுவதற்காக சிங்கள தலைவர்களால் தமிழீழ விடுதலை புலிகள் உருவாக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
தடை செய்யப்பட்ட மூன்று அமைப்புகள் தொடர்பான விவாதத்தில் நேற்று முன்தினம் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழீழ விடுதலை புலிகளின் போராட்டத்திற்கு அடிப்படை காரணிகள் இருக்கின்றது.
எனவே தடை செய்யப்பட்ட மூன்று அமைப்புகளுடன், தமிழீழ விடுதலை புலிகளின் அமைப்பையும், போராட்டத்தையும் இந்த சபையில் யாரும் சம்பந்தப்படுத்தி பேச வேண்டாமெனவும் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் குற்றம் புரியாத ஒரு நபரை தடுத்து வைப்பதென்பது தவறான விடயமாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment