விதிகளை மீறி கட்டப்பட்ட 20 மாடிக் கட்டடம் வெடி வைத்து தகர்க்கப்பட்டது.
சீனாவின் மத்திய ஹென்னான் பகுதியில் உள்ள ஸெங்ஷு ((Zhengzhou)) என்ற இடத்தில் 18 தளங்கள் மற்றும் 20 தளங்கள் என இரு கட்டடங்கள் முறையான அனுமதியின்றி கட்டப்பட்டன.
இதையடுத்து இரு கட்டடங்களையும் சீன அரசு இடித்துத் தள்ள உத்தரவிட்டதையடுத்து, இதற்கான நடவடிக்கைகள் துரித கதியில் நடந்தன.
முடிவில் இரு கட்டடங்களைச் சுற்றியும் ஆயிரத்து 100 கிலோ அளவிற்கு வெடிமருந்துகள் வைக்கப்பட்டன. இறுதியாக நேற்று முன்தினம் இந்தக் கட்டடங்கள் வெடித்துத் தகர்க்கப்பட்டன.
மொத்தம் 15 வினாடிகளில் இரு கட்டடங்களும் தரையில் விழுந்தன.
0 comments:
Post a Comment