கொலையில் முடிந்த குழுமோதல்

இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு நீண்டதில்  கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

இந்தக் கொலை சம்பவம்  கந்தானை - வீதி மாவத்தையில் நேற்று   இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் 28 வயதுடைய அதே பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞரொருவரே உயிரிழந்துள்ளார்.

தாக்குதல் சம்பவத்தில் மற்றுமொரு நபர் காயமடைந்த நிலையில் ராகமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் அடையாளம் காணப்பட்ட நிலையில் , அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment