வடமாகாணத்தின் புதிய பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி விஜய குணவர்த்தன இன்றைய தினம் மன்னார் மாவட்டத்துக்கு திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
மன்னாரிற்கு வருகை தந்த பிரதி பொலிஸ் மா அதிபர் மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலக்ததில் இடம் பெற்ற அணி வகுப்பு நிகழ்விலும் கலந்து கொண்டார்.
மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் பந்துல வீரசிங்க தலைமையில் குறித்த அணிவகுப்பு மறியாதை இடம் பெற்றது. தொடர்ந்து அங்கு மரக்கன்று ஒன்றையும் நட்டு வைத்தார்.
அதனைத்தொடர்ந்து மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளையும் சந்தித்து உரையாடியுள்ளதோடு, மன்னாரில் உள்ள ஒவ்வொரு பொலிஸ் பிரிவுகளின் நிலைமைகளையும் கேட்டறிந்தார்.
0 comments:
Post a Comment