ஜனநாயக போராளிகள் கட்சியினர் கடந்த வாரம் நாடாளுமன்றத்திற்கு சென்றார்கள் என்ற தகவல் நேற்று இரவு வெளியாகியது.
எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்சவை சந்திப்பதற்கே. இந்த சந்திப்பு ஏற்பாட்டை செய்தது, ஆறுமுகன் தொண்டமான எம்.பி.
நாடாளுமன்ற கட்டட தொகுதிக்கு ஜனநாயக போராளிகளை அழைத்து சென்று, மஹிந்த ராஜபக்சவை சந்திக்க வைத்து, உணவகத்தில் உணவு வழங்கி உபசரித்து வழியனுப்பி வைத்தது மாத்திரமே ஆறுமுகன் தொண்டமான் எம்.பி செய்தது.
எதிர்க்கட்சி தலைவர் மஹிந்தவுடன் பேசுவதற்கு மொழிபெயர்ப்பாளர் ஒருவரையும் அழைத்துக் கொண்டே ஜனநாயக போராளிகள் சென்றனர்.
தனது அணியுடன் இணைந்து செயற்பட வருமாறு மஹிந்த ராஜபக்ச இதன்போது அழைப்பு விடுத்துள்ளார்.
அந்த அழைப்பை சாதகமாக பரிசீலிகக தயாராக இருப்பதாகவும், ஆனால் 3 விவகாரங்களில் கவனம் செலுத்தப்பட வேண்டுமென்றும் ஜனநாயக போராளிகள் தெரிவித்துள்ளனர்.
அரசியல் கைதிகள் விடுதலை, காணி விடுவிப்பு, காணாமல் போனவர்கள் விவகாரத்தில் தீர்வு என்பவற்றில் கவனம் செலுத்த வேண்டுமென ஜனநாயக போராளிகள் தெரிவித்தனர்.
தமது தரப்பின் ஜனாதிபதி வேட்பாளர் வெற்றியடைந்ததும், தமிழ் மக்கள் தரப்பிற்காக செய்யப்பட வேண்டிய பட்டியலில் இந்த மூன்று விவகாரங்களுமே முதலிடத்தில் உள்ளதாக தெரிவித்த மஹிந்த ராஜபக்ச, தமது ஜனாதிபதி வேட்பாளர் வெற்றிபெற்றதும் இந்த மூன்று விடயங்களும் உடனடியாக தீர்க்கப்படும் என்றார்.
இந்த தகவலை தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு தான் பல முறை தெரிவித்துள்ளதாகவும், அவர்கள் அதில் அக்கறைப்படவில்லையென்றும் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment