இந்தியாவில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில்-2019 பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் செலவின் மொத்த தொகை வெளியாகியுள்ளது.
அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றிருந்தது. இதனையடுத்து, மோடி இந்தியாவின் பிரதமராக இரண்டாவது முறையாகவும் பதவியேற்றுக்கொண்டார்.
இந்த நிலையில் ஊடக ஆய்வாளர்களுக்கான மையம், 2019 நாடாளுமன்றத் தேர்தல் செலவு குறித்து தகவலை வெளியிட்டுள்ளது.
கள ஆய்வு, பகுப்பாய்வு மற்றும் மதிப்பீடு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த புள்ளிவிவரங்கள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன.
அதில், 2019 நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து கட்சிகளும் சேர்ந்து மொத்தம் 60 ஆயிரம் கோடி ரூபா செலவு செய்யப்பட்டுள்ளதாக வெளியிட்டுள்ளது.
இது உலகிலேயே அதிக பணம் விளையாடிய தேர்தலாக 2019 நாடாளுமன்றத் தேர்தல் இருக்கிறது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின் படி, ஒரு வாக்காளருக்கு 700 ரூபாயும், ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கு 100 கோடி ரூபாவும் செலவு செய்துள்ளதாகக் கூறிப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் 12 ஆயிரம் கோடி முதல் 15 ஆயிரம் கோடி வரை வாக்காளர்களுக்கு நேரடியாக பணமாக விநியோகிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், 20 ஆயிரம் கோடி முதல் 25 ஆயிரம் கோடி வரை விளம்பரத்திற்கு செலவிடப்பட்டுள்ளது.
அதில், ஆளும் பாஜக 45 சதவீத செலவு அதாவது மொத்தம் 27 ஆயிரம் கோடி ரூபாசெலவு செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி 20 சதவீதம் 12 ஆயிரம் கோடி செலவு செய்துள்ளதாக வெளியிட்டுள்ளது.
2024 நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் செலவு 1 டிரில்லியன் கோடி ஆகும் என ஊடக ஆய்வாளர்களுக்கான மையத்தின் தலைவரான என் பாஸ்கர ராவ் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment