தென்னிந்திய மொழிப் படங்களில் பிசியாக நடித்து வருபவர் வரலட்சுமி. தற்போது இவரது நடிப்பில் சேஸிங் என்ற ஆக்ஷன் திரில்லர் உருவாகி வருகிறது. இப்படத்தை கே.வீரக்குமார் இயக்கி வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் சண்டைக்காட்சி ஒன்றை படக்குழு சமீபத்தில் படமாக்கியுள்ளது. அதில் வரலட்சுமி கயிறு பயன்படுத்தாமல், டூப் ஏதுமில்லாமல் சண்டை போடும் வீடியோவை வரலட்சுமி பகிர்ந்தார்.
வரலட்சுமியின் இந்த ஸ்டண்ட் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. பிரபல சண்டைப்பயிற்சி இயக்குனர் சூப்பர் சுப்புராயன் இந்த படத்திற்கான சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருந்தார்.
0 comments:
Post a Comment