ஆயுத குழுவினால் கொலை செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்திரின் சடலம் அகழ்வு

கடந்த 2008 ஆம் ஆண்டு ஆயுத குழுவொன்றினால் கொலை செய்யப்பட்டு, புதைக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம், உடற்கூற்று பரிசோதனைக்காக நாளை தோண்டி எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பில் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய கருணா ஆயுத குழுவின் முன்னாள் உறுப்பினர்கள் 3 பேர் கைது செய்யபபட்டுள்ளனர்.

அதேவேளை மயானத்தில் புதைக்கப்பட்ட சடலத்தை நாளைய தினம், தோண்டி எடுத்து இரசாயண பகுப்பாய்வுக்கு அனுப்ப உள்ளதாக குற்றவிசாரணை பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2008 ம் ஆண்டு கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த கிரான்குளத்தைச் சேர்ந்த பிரசன்ன என்ற பொலிஸ் உத்தியோகத்தர் கடமை முடிந்து பொலிஸ் நிலையத்திலிருந்து வீடு திரும்பிய நிலையில் காணாமல் போயிருந்தார்.

காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தர் தொடர்பாக, குற்ற விசாரணை பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தாரை கடத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் கருணா ஆயுத குழுவின் முன்னாள் உறுப்பினர்களான மகிளன் என்றழைக்கப்படும் மேரி அன்ரனி போல் அஜதீபன், மதன் என்றழைக்கப்படும் தம்பிமுத்து செல்வராசா, லிங்கன் என்றழைக்கப்படும் சந்திரன் சுப்பிரமணியம் ஆகிய மூவரையும் சந்தேகத்தின் பேரில் ஓட்டமாவடி, களுவாஞ்சிக்குடி, கல்லடி, போன்ற இடங்களில் வைத்து கடந்த மார்ச் மாதம் குற்றவிசாரணை பிரிவினர் கைது செய்தனர்.

இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தர், கடத்தப்பட்டு பின்னர் சுட்டு கொல்லப்பட்டு கொக்கட்டிச்சோலை முனைக்காடு மயானத்தில் புதைக்கப்பட்டதாக குற்ற விசாரணை பிரிவினரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குறித்த சடலத்தை தோண்டி எடுப்பதற்கு குற்றவிசாரணை பிரிவின் உப பரிசோதகர் என். நவரெட்ண மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் கடந்த மாதம் 23 ஆம் திகதி அனுமதிகோரியிருந்தார்.

இதனையடுத்து சடலத்தை நாளை நீதவான் முன்னிலையில் தோண்டி எடுத்து, பகுப்பாய்வுக்கு அனுப்ப நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment