போதைப்பொருள் மற்றும் புகைத்தல் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணியொன்று யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில், பிரதேச செயலாளர் எஸ்.சுதர்சன் தலைமையில் இன்று காலை 9.30 மணியளவில் இந்த பேரணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பிரதேச செயலகத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பேரணியானது பிரதான வீதி, சுண்டுக்குழி சந்தி வழியாக கண்டி வீதியை சென்றடைந்து, அங்கிருந்து பழைய பூங்கா வீதியிலுள்ள பிரதேச செயலகத்தில் நிறைவடைந்துள்ளது.
இந்த பேரணியில் கலந்துகொண்டவர்கள், போதை மற்றும் புகைத்தலை தடுக்கும் வகையிலான வாசகங்கள் பொறிக்கப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்தனர்.
பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பாதிரியார்கள் மற்றும் பொது மக்கள் எனப் பலரும் பேரணியாக சென்று புகைத்தலுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment