சென்னையில் அக்னி நட்சத்திரம் முடிந்த நிலையிலும் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. அவசியமான காரணங்கள் இன்று மதியம் வெளியில் நடமாட வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மதியம் முதல் மிதமான மழை பெய்தது. இந்த மழையால் அந்தந்தப் பகுதிகள் குளிர்ந்தன.
தரமணி, சோழிங்கநல்லூர், ஆலந்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. பல்வேறு பகுதிகளில் மழை பெய்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சென்னையின் பல இடங்களில் ஆறு மாதங்களுக்கு பிறகு பரவலாக மழை பெய்துவருகிறது; வெயில் வாட்டி வதைத்த நிலையில் மழையால் வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
0 comments:
Post a Comment