இலங்கைக்கு வருகை தந்துள்ள அவுஸ்ரேலியா வெளிவிவகார அமைச்சர் பீட்டர் டடினுக்கும் இலங்கையிலுள்ள உயர்மட்ட அரச தலைவர்களுக்கும் இடையில் விசேட கலந்துரையாடலொன்று இன்று நடைபெறவுள்ளது.
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று இலங்கைக்கு வந்த பீட்டர் டடின் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தாக்குதல் இடம்பெற்ற கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியன் தேவாலயத்தை சென்று பார்வையிட்டுள்ளார்.
இந்நிலையில் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முக்கிய அமைச்சர்களை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக அவுஸ்ரேலியாவின் உள்துறை அமைச்சரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதன்போது சட்டவிரோத குடியேற்றவாசிகளின் பயணங்களைத் தடுத்தல் மற்றும் தீவிரவாத செயற்பாடுகளை முறியடித்தல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து அதிகம் கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment