ஐசிசி உலக கோப்பை லீக் ஆட்டத்தில், வங்கதேச அணியை 106 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வீழ்த்தியது.
இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய் 153 ரன் விளாசி வெற்றிக்கு வித்திட்டார். சோபியா கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இங்கிலாந்து தொடக்க வீரர்களாக ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ களமிறங்கினர்.
அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 19 ஓவரில் 128 ரன் சேர்த்து வலுவான தொடக்கத்தை கொடுத்தது. பேர்ஸ்டோ 51 ரன் (50 பந்து, 6 பவுண்டரி) விளாசி பெவிலியன் திரும்பினார்.
அடுத்து வந்த ஜோ ரூட் 21 ரன் எடுத்து சைபுதின் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். சிக்சர்களாகப் பறக்கவிட்டு வங்கதேச பந்துவீச்சை சிதறடித்த ராய் 153 ரன் (121 பந்து, 14 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசி மிராஸ் சுழலில் மோர்டசா வசம் பிடிபட்டார். ஒருநாள் போட்டிகளில் 3வது முறையாக அவர் 150+ ஸ்கோர் அடித்தார்.
ஜோஸ் பட்லர் 64 ரன் (44 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்), கேப்டன் மோர்கன் 35 ரன் (33 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்), ஸ்டோக்ஸ் 6 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 386 ரன் குவித்தது. அந்த அணி தொடர்ச்சியாக 7வது ஒருநாள் போட்டியில் 300+ ரன் எடுத்தது குறிப்பிடத்தக்கது. வோக்ஸ் 18, பிளங்கெட் 27 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
வங்கதேச பந்துவீச்சில் முகமது சைபுதின், மெகதி ஹசன் மிராஸ் தலா 2, மோர்டசா, முஸ்டாபிசுர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 387 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமாக இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment