தவுலகல – பூவெலிக்கடையில் பாவனைக்கு உதவாத 2 ஆயிரத்து 230 கிலோ கிராம் தேயிலையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் கம்பளை பொலிஸ் அதிரடி படையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
பாரவூர்தி ஒன்றில் குறித்த தேயிலை எடுத்துச் செல்லப்பட்டபோது மேற்கொள்ளப்பட்ட சோதனையை தொடர்ந்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரினால் எடுத்துச் செல்லப்பட்ட தேயிலையும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை தவுலகல பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
0 comments:
Post a Comment