தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சமீபத்தில் டெல்லி சென்று பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை சந்தித்தார். அப்போது தமிழகத்தில் நிலவும் பிரச்சனைகள் குறித்து ஆலோசனை நடத்தினர். இதையடுத்து, பன்வாரிலால் புரோகித் தமிழகம் திரும்பினார்.
இந்நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் பழனிசாமி ராஜ்பவனில் இன்று மாலை சந்தித்துப் பேசினார்.
அப்போது, டி.ஜி.பி. நியமனம், தலைமைச் செயலாளர் நியமனம், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரம் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து ஆளுநருடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியானது.
0 comments:
Post a Comment