சமுர்த்தி அபிவிருத்தித் திட்டம் பயனற்ற ஒரு நடவடிக்கையாகும் எனவும் தனக்கு அதிகாரம் இருக்குமாயின் சமுர்த்தித் திட்டத்தை செல்லுபடியற்றதாக ஆக்கிவிடுவதாகவும் சப்ரகமுவ மாகாண ஆளுனர் தம்ம திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பலாங்கொடயில் நேற்று (28) நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
வறுமையை ஒழிப்பதற்கு சமுர்த்தி அதிகாரிகளுக்கு தொழில் வழங்கப்பட்ட போது அந்த அதிகாரிகளின் வறுமையே நீக்கப்படுகின்றது. பாரிய எண்ணிக்கையிலான மக்களுக்கு சமுர்த்தி உதவி வழங்கப்பட்டதனால், அரசியல்வாதிகளின் வறுமையே போக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சமுர்த்தி செயற்திட்டம் தேர்தல் வாக்குகளை நோக்காகக் கொண்ட ஒரு இயந்திரம் என கடந்த அரசாங்கத்தில் இருந்த ஒரு அமைச்சர் குறிப்பிட்டிருந்ததாகவும் தெரிவித்த ஆளுனர், வறுமையை ஒழிப்பதை நோக்காகக் கொண்ட செயற்திட்டம் அமைக்கப்படுவது காலத்தின் தேவையாகும் எனவும் ஆளுனர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment