அதானியின் நிலக்கரி சுரங்கத்திற்கு ஆஸ்திரேலிய அரசு அணுமதி

இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர் அதானியின் நிறுவனமானது ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் நிலக்கரி வெட்டி எடுக்கும் சுரங்கம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அதானி குழுமம் அமைக்கவிருக்கும் இந்த சுரங்கம் ஆஸ்திரேலியாவிலேயே மிகப்பெரிய நிலக்கரி சுரங்கமாக கருதப்படுகிறது.
இந்நிலையில் நிலக்கரி சுரங்கத்தால் நிலத்தடி நீர் மாசுபாடு மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படும் என்ற குற்றச்சாட்டு சுற்றுச்சூழல் நல ஆர்வலர்கள் மத்தியில் பரவலாக எழுந்தது. இது தொடர்பாக சுற்றுச்சூழல் நல ஆர்வலர்கள் குழு ஒன்றை அமைத்து நிலக்கரி சுரங்க ஆலை அமைப்பிற்கு ஏதிராக குயின்ஸ்லாந்து உட்பட ஆஸ்திரேலியாவின் பல்வேறு மாகாணங்களில் தொடர்ந்து பல கட்டங்களாக STOP ADANI, ADANI GO HOME என்ற முழக்கள் மூலம் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், குயின்ஸ்லாந்து மாகாணத்தில் அமைய உள்ள அதானியின் நிலக்கரி சுரங்கத்திற்கு ஆஸ்திரேலிய அரசின் சுற்றுசூழல் துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியதாவது:
அதானி குழுமத்தால் தொடங்க உள்ள நிலக்கரி சுரங்க தொழிற்சாலை தொடர்பாக நீர் மேலாண்மை நிர்வாகம் குறித்து பலமுறை ஆய்வு செய்பப்பட்டது. அதில் சுற்றுசூழலினை பாதிக்கும் வகையிலான எந்த ஒரு நடைமுறையும் செயல்படுத்தபடவில்லை. மேலும் அதானி குழுமத்தின் நிலத்தடி நீரினை பாதுகாக்கும் நடைமுறைகளும் திருப்திகரமாக உள்ளது. ஆகையால் நிலக்கரி சுரங்க தொழிற்சாலை தொடங்க சுற்று சூழல் துறையிலிருந்து எந்தவித தடையும் இல்லை.
இவ்வாறு அந்த செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதானி குழுமத்தின் நிலக்கரி சுரங்க தொழிற்சாலைக்கு ஆஸ்திரேலிய சுற்று சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியதற்கு அந்நாட்டு சுற்றுசூழல் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் ஏதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment