மன்னார் முசலி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட வில்பத்து பகுதியில் மரக் கன்றுகள் நடும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
குறித்த பகுதிக் காடுகள் அழிக்கப்பட்டு வந்துள்ள நிலையில் மன்னார் தள்ளாடி 54 ஆவது படைப்பிரிவின் ஏற்பாட்டில் இப் பகுதிகளில் தொடர்ச்சியாக மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் இன்று காலை 10 மணியளவில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு இடம் பெற்றது.
54 ஆவது படைப்பிரிவு அதிகாரி மேஜர் ஜெனரல் பண்டார தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் இராணுவத்தின் வன்னி மாவட்டக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா கலந்து கொண்டார்.
இதன் போது முசலி பிரதேச செயலர் கே.எஸ்.வசந்தகுமார், மக்கள் பாடசாலை மாணவர்கள், இராணுவத்தினர் என ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.
இன்றைய தினம் 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டதோடு, இது வரை குறித்த பகுதியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment