நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தின தேரருக்கு ஆதரவாக கண்டியில் இடம்பெற்றுவரும் மாபெரும் போராட்டத்தில் முஸ்லிம் நபர்கள் மூவரால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் கடந்த சில தினங்களாக ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில் அவருக்கு ஆதரவாக இன்றைய தினம் கண்டி நகரில் பாரிய போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதையடுத்து, 10 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்ட இப் போராட்டத்தில் தங்களது அடையாளத்தை வெளிப்படுத்த முடியாத மூன்று முஸ்லிம் நபர்கள் கலந்து கொண்டதன் காரணமாக பதற்றம் ஏற்பட்டுள்ளது.
குறித்த மூவரையும் தங்களது அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களை அங்குள்ளவர்கள் கேட்டபோது அவர்கள் தமது அடையாளத்தை உறுதிப்படுத்தத் தவறியுள்ளனர்.
இதன் காரணமாக அங்கிருந்தவர்கள் குறித்த மூவர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். பின்னர் அங்கு கடமையில் இருந்த பொலிஸார் அவர்களை பொதுமக்களிடமிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.
எனினும் பொலிஸாரிடமும் தமது அடையாளத்தை அவர்கள் உறுதிப்படுத்த முடியாத காரணத்தினால் குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment