இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலின் போது சேதமடைந்த நீர்கொழும்பு கட்டுவப்பிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயத்திற்கு அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் பீட்டர் டட்டன் விஜயம் செய்துள்ளார்.
இலங்கைக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையிலேயே அவர் நேற்று நீர்கொழும்பு கட்டுவப்பிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயத்திற்கு சென்றுள்ளார்.
இதன்போது, குண்டுத்தாக்குதலில் உயிர் நீத்தவர்களை நினைவுகூர்ந்து மலர் வைத்து மௌன அஞ்சலி செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து அங்கு கருத்து வெளியிட்ட அவர், ‘குண்டு தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட தேவாலயங்களில் மிக விரைவாக திருத்தற்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதையிட்டு பெரும் மகிழ்ச்சியடைகின்றேன்.
அவுஸ்ரேலிய பிரதமர் உட்பட அரசியல் பிரதிநிதிகள், நாட்டுமக்கள் சார்பாக இலங்கையில் நடந்த துக்ககரமான சம்பவத்தில் உயிர்நீத்த, காயமடைந்த குடும்பங்களுக்கு அனுதாபங்களை தெரிவித்து கொள்கின்றேன்.
இலங்கை அரசுக்கு அவுஸ்ரேலியா நீண்ட காலமாக நட்புறவுடன் ஆதரவாக செயற்பட்டு வருகின்றது. இனி வரும் காலங்களிலும் அவ்வாறே செயற்படும்.
இலங்கையில் தற்போது பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்வதற்கு அவுஸ்ரேலியா பூரண ஒத்துழைப்பை வழங்கும்’ என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் தற்போது பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்வதற்கு அவுஸ்ரேலியா பூரண ஒத்துழைப்பை வழங்கும்’ என குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment