தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவலகள் அமைச்சர் மனோ கணேசன் மற்றும் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று அடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு கடந்த 26 ஆம் திகதி அமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
யாழ் குடாநாட்டு மக்களுக்கு குடிதண்ணீர் வழங்கும் நோக்கோடு முன்னெடுக்கப்பட்டுவரும் 'வடமராட்சி களப்பு' நன்னீர் திட்டத்திற்கு அமைச்சின் சார்பில் நிதியுதவி வழங்க முன்வந்திருக்கும் அமைச்சர் மனோ கணேசன் வடமாகாணத்தின் தண்ணீர்ப் பிரச்சனைக்குச் சிறந்த தீர்வைக் காண்பதற்கு தனது அமைச்சினூடாக உதவி புரிவதற்குத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இதேவேளை வடமாகாணத்தில் வளர்ந்துவரும் சமயங்களுக்கிடையிலான பிரச்சனையை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டியதன் அவசியம் குறித்தும் அதற்காக முன்னெடுக்கக்கூடிய செயற்திட்டங்கள் குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
0 comments:
Post a Comment