அவுஸ்ரேலியாவின் சிட்னியில் கடும் பனிப்பொழிவு காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
சிட்னிக்கு வர வேண்டிய விமானங்களும், அங்கிருந்து புறப்பட வேண்டிய விமானங்களும் பனிமூட்டம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிட்னியில் தரையிரங்க வேண்டிய சில விமானங்கள் அவுஸ்ரேலியாவின் ஏனைய சில விமான நிலையங்களுக்குத் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அத்துடன், Qantas, Virgin Australia விமானச் சேவைகளில் சிலவும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பனிமூட்டம் கப்பல் சேவைகளையும் பாதித்துள்ளதாகவும், விபத்து ஏதும் நேராமல் இருக்க கப்பல்கள், உரத்த சங்கொலியோடு எச்சரிக்கையாகச் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் தற்போது பனிமூட்டம் குறைவடைந்துள்ளதாகவும், விமானச் சேவை வழமை நிலைக்கு திரும்பியுள்ளதாகவும் அவுஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, அதிகப் பனிமூட்டத்தால் சில பிரபலமான கட்டடங்கள் காணாமற் போனதாக சமூக வலைத்தளங்களில் நகைச்சுவையான பதிவுகள் பகிரப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment